நாளை 8 மணி நேர நீர்வெட்டு

 


சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


நாளை (12) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலப்பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, கந்தர, கொட்டகொட, குடாவெல்ல, திக்வெல்ல மற்றும் ரத்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here