பதவி விலகும் ஊடக ஜாம்பவான்..!!!


இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியான சூரியன் FM ன் பணிப்பாளர் A.R.V.லோசன் மற்றும் திட்டமிடல் பிரிவில் முக்கிய பதவி வகித்த அஜித் ஆகியோர் இன்றுடன், விடை பெறுகின்றனர்.

பல தசாப்த காலம் சூரியனில் கடமையாற்றிய இவர்கள், இன்றுடன் (31) விலக போவதாக ஏற்கனவே நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இருவரும் இன்றுடன் சூரியன் வானொலியிலிருந்து விலகுவதாக சூரியன் வானொலியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இருவரும் விலகுவதாக அறிய முடிகின்றது.

தமிழ் வானொலி ரசிகர்களின் மனங்களை வென்ற இந்த இருவரும், சூரியனின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனில் கடமையாற்றி பிரபல்யங்களான சந்துரு, மேனகா, வர்ஷி உள்ளிட்ட பலர் அண்மை காலத்தில் பதவி விலகியிருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here