கடற்படைக்கு சொந்தமான பேருந்துடன் வான் ஒன்று மோதி விபத்து

 


அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து கடற்படைக்கு சொந்தமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் மணமகளை அலங்கரிப்பதற்காக வானில் சிலர் பயணித்ததில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் வானில் பயணித்த மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய சென்ற மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் ( 40 வயது) நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த வானின் சாரதியும்( 22 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Previous Post Next Post


Put your ad code here