வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்


 வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.


தாயினால் உணவாக வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக் கொண்ட குழந்தை கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மெதகெட்டுவ பகுதியை சேர்ந்த 11 மாதங்கள் வயசான சலன நிம்சரா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக குழந்தையின் சடலம் காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here