கொட்டகலை பகுதியில் மற்றுமொரு லிற்றோ எரிவாறு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவில் பழைய விடமைப்பு திட்டத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீடொன்றில் இன்று (12) திகதி அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியை தண்ணீர் சுட வைப்பதற்காக லிற்றோ எரிவாயு அடுப்பை மூட்டிய போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெடிப்பு சம்பம் தொடர்பான ஆராய்வதற்காக அடுப்பு பகுதிகளையும் எரிவாயு வினையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்வபவம் குறித்து ஆசிரியை கருத்து தெரிவிக்கையில் இன்று அதிகாலை நான் கேஸ் அடிப்பினை தண்ணீர் சுட வைப்பதற்காக பற்ற வைத்த போது குழந்தை அழுதது குழந்தையை பார்க்க சென்ற வேளையில் இந்த அடுப்பு வெடித்தது இதனால் எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த எரிவாயு கொள்கலன் கொட்டகலை பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் 15 நாட்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடபான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.