நேற்று (13) மாலை 4.30 மணியளவில் பதுளை-கொழும்பு வீதியின் ஹாலிஎல பகுதியில் வீதியை கடக்கும்போது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி மனிதாபிமானமற்ற செயலைச் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரிடம் 200 ரூபாவை கொடுத்துவிட்டு பாதி வழியில் இறக்கிவிட்டு வேனின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து வேனின் சாரதி கரந்தகொல்ல வீதித் தடுப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news