Friday 31 December 2021

இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி வரி குறைப்பு..!!!

SHARE

2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் தற்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியன நாளை முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE