நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டிருந்தது.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news