லண்டனில் இருந்த வந்த பெண்ணுக்கு நடந்தது என்ன? - வௌியான உண்மை..!!!




போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஓட்டுத் துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து ஒரு சோடி தோடு, ஒரு சோடி காப்பு, சங்கிலி ஒன்று, 2 மோதிரங்கள் ஆகிய ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

நேற்றையதினம் கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய 67 வயதான பெண் காணாமல் போன நிலையில் சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்க பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here