புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்தது

 


எரிவாயு நிறுவனங்களால் புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.


இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.

இதேவேளை, மற்றுமொரு எரிவாயு தாங்கி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளது.

அதிகாரிகளால் எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்காக பெற்று அறிக்கைகளை பெற்ற பின்னரே எரிவாயு சேமிப்பிற்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here