டிக்டொக் செயலி காணொளி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய ஒழுங்கை வழியாக சில நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போதே அவர்களது பின்னால் வந்த சிலரால் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிக்டொக் செயலியில் உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பான தகராறின் காரணமாக கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்டொக் டிக்டொக் செயலி கடந்த இரண்டு வருடங்களாக விரைவாக வளர்ச்சியடைந்து வருவதுடன், இலங்கையிலும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் உள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாகவுள்ளது.
Tags:
sri lanka news