சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிஸார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று முன்தினம் (02) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 10,199 பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
Tags:
sri lanka news