கொட்டதெனியாவ – வத்துமுல்லே – பாந்துராகொட பகுதியில் காணாமல் போன இரண்டு சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெரஎலிஎந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு வருகைத் தந்திருந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த இருவரையும் அங்குள்ள சிலர் பிடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு புத்தாடைகள் அணிவித்து, பெண்ணொருவரினால் மீரிகம பொலிஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி குறித்த இரண்டு சிறுவர்களும் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
10 மற்றும் 12 வயதான உறவு முறை சகோதரர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு சிறுவர்களும், மேலதிக விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்;.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸாருடன் இணைந்து, குற்றப் புலனாய்வு பிரிவினரும் முன்னெடுத்து வந்திருந்தனர்.
Tags:
sri lanka news