Wednesday 5 January 2022

மாமனிதரின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு..!!!

SHARE

சட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலைவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவு நாள் இன்று (05.01.2022) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான க.சுகாஸ், மற்றும் ந.காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.
ஆயுதப்போராட்டத்தின் பிறப்புப்பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தேவை பற்றியும் உலகப் பிரமுகர்களுக்கும் விளக்கி . தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அம்பலபப்டுத்தி, அவற்றை சர்வதேச மனித உரிமைக் கழகங்களிடம் எடுத்துச் சென்றதுடன்
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தேசவிடுதலைக்கு ஆற்றவேண்டிய பங்களிப்புகள் பற்றி விளக்கி. எமது இனத்தின் அறிவுஜீவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்த மாமனிதர் . குமார் பொன்னம்பலம் சிங்களப் பேரினவாதிகளுடன் மட்டுமன்றி பேரினவாதத்திற்கு ஏவல் செய்யும் தமிழ்க்குழுக்களுக்கும் எதிராகவும் அவர் காட்டமானவகையில் தனது எதிர்புணர்வைக் காட்டினார்.

இவ்வாறு களத்திலும் புலத்திலுமாக தமிழ் தேச விடுதலையை தன் நெஞ்சிலே சுமந்து பணியாற்றிய ஒரு தமிழ்தேசிய அரசியல்தலைவரை "விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்" என தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி















SHARE