மேலும் 690 பேருக்கு கொவிட் தொற்று உறுதி


 நாட்டில் இன்றைய தினம் மேலும் 690 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 596,347 அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (15) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,211 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here