சர்ச்சைகளை ஏற்படுத்திய மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு..!!!


யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ் மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த பதாகை அமைப்பதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக உள்ளூர் பத்திரிகை ஒன்றில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கட்டுரைகளை எழுதி வந்ததுடன் , சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here