சுகாதார சேவை தொடர்பாக முறையிட விசேட துரித எண்..!!!




சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

நாட்டில் நிலவும் சுகாதார சேவை தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், முறைப்பாடுகள், குறைகள் மற்றும் அனைத்து ஆலோசனைகளையும் தெரிவிக்க இந்த துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ´சுவ செவன´ என்ற பெயரில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1907 என்ற துரித இலக்கத்தின் ஊடாக இவ்வாறான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 0707 907 907 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடாகவும் இந்த முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here