மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி


 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25) காலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டு ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை செலுத்தி வருவதாகவும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ரயில் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்ற நிலையில் பார்வீதி உப்போடையில் வீதியில் காலை 6 மணிக்கு முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் அதன் அருகே மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here