யாழில் குற்றசெயலுடன் தொடர்புடைய மூவர் கைது - இரண்டு மோட்டார் சைக்கிளும் மீட்பு..!!!


யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சுன்னாகம் - அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலானாய்வு பிரினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் குற்றச் செயலர்களுடன் தொடர்புடைய இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here