புத்தாண்டில் ஏற்பட்ட சோகம் - தந்தையும் மகனும் பலி..!!!




தெனியாய, கொலவெனிகம சத்மாலே நீர்வீழ்ச்சியில் இன்று (01) பிற்பகல் நீராடச் சென்ற தந்தையும் மகனும் நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் காலி, ஹபுகல, ஜிந்தோட்டை பிரதேசத்தில் சேர்ந்த 48 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செல்ஃபி எடுக்கச் சென்றபோது மகன் தவறி விழுந்துள்ள நிலையில், மகனைக் காப்பாற்ற தந்தை நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்துள்ளார்.

இருவரும் காணாமல் போனதாகவும், பின்னர் இருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் இரண்டு மகள்கள் நீராடுவதற்காக இங்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக சம்பவ இடத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

தந்தையும் மகனும் விழுந்த பகுதி சுமார் 40 அடி ஆழத்தில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here