யாழில். 85 கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது..!!!


கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 85 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீட்டு வளாகத்திலிருந்து கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் 36 வயதுடைய கணவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here