மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பொத்தானை நிகவெவ பிரதேசத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 அடி 9 அங்குல உயரம் கொண்ட குறித்த பெண் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகளில் தகவலுக்கு அமைய நிகவெவ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நீதவான் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவரது சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news