முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

 


வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் 85 வயதுடைய முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கண்ணகிபுரத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.

நேற்று (17) மதியம் தனது பேத்திக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சை காரணமாக கோபம் கொண்ட முதியவர் பேத்திக்கு கல்லால் எறிந்துள்ளதாகவும் தலையில் காயம் ஏற்பட்ட பேத்தியை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு சென்றிருந்தனர்.

முதியவர் பயத்தின் காரணமாக தனது அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டுள்ளார்.

நேரமாகியும் முதியவர் வெளியில் வராததால் சந்தேகம் கொண்டு கதவை திறந்து பார்த்தபோது நைலோன் கயிற்றினால் களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here