முகமாலையில் மனித எச்சம் மீட்பு

 


பளை முகமாலை பகுதியில் மனித நேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் பணியின் போது மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டமை அடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (19) வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Previous Post Next Post


Put your ad code here