கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து அன்பளிப்பு

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.


கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பேருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 54 ஆசனங்களை கொண்ட சொகுசு பேருந்தாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களிடம் பேருந்தின் திறவுகோலினை வழங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து பேருந்திலுள்ள வசதிகளை பிரதமர் பார்வையிட்டார்.

இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களுக்கு பிரதமர் நினைவு சின்னமொன்றை வழங்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களினால் பிரதமருக்கும் நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.

பிரதமர் நிதியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த அவர்களின் தலையீட்டின் கீழ் இப்பேருந்திற்கான வரி நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற உதவி அதிபர் அஷோக கலஹிடியாவ இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here