தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது கோசங்களை ஏற்படுத்துவதன் மூலம் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியாது.
தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு எதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news