எரிவாயு வெடிப்பு தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிட திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,
இப்பாடசாலை வடமேல் மாகாணத்தில் முன்னணியில் திகழும் பெண்கள் பாடசாலையாகும். இந்தக் கல்லூரி வரலாற்றில் தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்கியுள்ளது. குருநாகல் பற்றிப் பேசினால் மலியதேவ ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி பற்றியே பேசப்படும்.
ஜனாதிபதியின் செயலாளரும், உங்களது காலப்பகுதியின் திறைசேரியின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி.பீ ஜயசுந்தர தனது உயர் கல்வியை மலியதேவ ஆண்கள் கல்லூரியிலேயே கற்றார்.
எமது அரசாங்கம் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்ட அரசாங்கமாகும். நமது அரசாங்கம் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள், இந்த முழு உலக மக்களும் இயற்கையாகவே சவாலுக்கு உள்ளாகியிருந்த காலம் அது. எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உங்கள் தலைமையில் முதலாவது, இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை எமது மக்களுக்கு வழங்கியது மட்டுமன்றி, பிள்ளைகளுக்கும் தடுப்பூசி வழங்கி எமது மக்களின் உயிரைக் காப்பாற்றியமை வரலாற்றில் இடம்பெறுகின்றது.
இப்போது புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய வழியில் சிந்தியுங்கள். நேர்மறையாக சிந்தித்து நாம் முன்னேற வேண்டும். அதைத்தான் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அந்நியச் செலாவணி பற்றாக்குறை இருப்பது எங்களுக்குத் தெரியும். அதனால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயுவில் சிக்கல் உள்ளது. எரிவாயு வெடிப்பு பற்றி நேற்று என்னிடம் கேட்கப்பட்டது. எனக்கு பெரிய பிரச்சினை இருக்கு, கொழும்பு 7 இல் எரிவாயு வெடிக்காது என்றேன். வடக்கிலும் வெடிக்காது. குருநாகல் நகரிலும் வெடிக்காது. கண்டியிலும் வெடிக்காது. வெவ்வேறு இடங்களில் மட்டும் வெடிக்கிறது. எனவே, பிரதமர் அவர்களே, இதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அடுத்த சில வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நம் மக்கள் நேர்மறையாக சிந்திக்கும் காலம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். என்றார்.
Tags:
sri lanka news