குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news