ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) இடம்பெறுகின்றது.
அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று மு.ப. 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
மேலும், அனைத்துவிதமான சுகாதார முறைகளையும் பின்பற்றி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
Tags:
sri lanka news