Thursday 6 January 2022

இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை..!!!

SHARE



நாட்டில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 29 வயதிற்கும் குறைந்த அனைத்து இளைஞர்களுக்கும் இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதுடன், சர்வதேச ரீதியில் பிலோக் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பம் ஊடாக இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டிருப்பதாக தேசிய இளைஞர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதில் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதி உள்ளிட்ட ஏனைய தகுதிகள் உள்ளிட்ட தரவுகளை கொண்ட வங்கியாக பயன்படுத்த கூடிய சந்தர்ப்பம் இருப்பதுடன், சேவையாளருக்கு தகுதியான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்கு தெரிவு செய்வதற்கு இதனூடாக வசதி கிடைக்கின்றது.

உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அடையாள அட்டையை தேசிய இளைஞர் மன்றத்தினூடாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது
SHARE