மீள் மதிப்பீட்டின் ஊடாக C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு..!!!




க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன.

இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார்.

அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.

மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here