போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

 


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இன்று (4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சுமேதகம, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில் ஹேரொயின் போதைப்பொரு விற்பனை செய்வது மற்றும் பாவிப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஐந்து தடவைகள் சிறைவாசம் சென்று வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Previous Post Next Post


Put your ad code here