பாணந்துறையில் நோயாளர் காவு வண்டியின் சாரதி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடம் இருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 27ஆம் திகதி, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொல்ல இரண்டு துப்பாக்கிதாரிகள் உட்பட நான்கு பேர் வந்திருந்தனர்.
எனினும், துப்பாக்கி இயங்காததால் ஆம்புலன்ஸ் சாரதியின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
Tags:
sri lanka news