யாழ். பல்கலை தற்காலிக உதவி விரிவுரையாளர் மரணம்

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.


அதிகாலை 5 மணி அளவில் சுகவீனம் காரணமாக மொணராகலை - சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here