பிரான்ஸின் புதிய அறிவிப்பு.

 


பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பரிசோதனை செய்து ´தொற்று இல்லை´ என ´கொரோனா நெகட்டிவ்´ சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here