பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள்...

 


தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (07) காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.


சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தில் புற்றுநோய் மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகள் ஈடுபடாது எனவும் அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகளில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here