நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொவிட் மரணங்கள்

 


​கொவிட் தொற்றுக்கான மேலும் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,473 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 417 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 578,849 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here