மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி பலி


பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் வயல்​வௌி ஒன்றில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.


நேற்றிரவு (11) இருவர் மின்சாரம் தாக்கி வயல்வெளியில் விழுந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பெல்மடுல்ல, படலந்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வுக்காகச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Previous Post Next Post


Put your ad code here