கொய்யாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய 14 வயதுச் சிறுமி தவறிக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, மாங்குளத்தில் உள்ள புதிய கொலனியில் நேற்று மாலை நடந்துள்ளது.
சிறுமி மரத்தில் ஏறிக் கொய்யாப்பழம் பறிக்க முயன்றபோது, அருகில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் உடல் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Tags:
sri lanka news