15 ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்..!!!




ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று (23) 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இன்றும் கலைஞர்கள் உட்பட பலர் இதில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, போராட்ட தளத்தில் இரண்டு நாட்களாக மரண உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வண. தெரிப்பெஹே சிறிதம்ம தேரர் நேற்று காலை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சார்பாக மேலும் இரு பிக்குகள் இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்க தலைவர்களும் நேற்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here