இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் தெரிவிப்பு..!!!


இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும் தனக்கு கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இராஜினாமா செய்யுமாறு அவர் தனக்கு இனி கூறப்போவதுமில்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ விலகக்கூடாது என இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here