நடிகர் சிம்புவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம்.இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகின்றது.
மேலும் இத்திரைப்படம் நடிகர் சிம்புவின் 47வது திரைப்படமாகும்.இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதேவேளை, 'வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் மே மாதம் 6ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news