திருவிழா தருணத்தில் இரு வீடுகளில் திருட்டு..!!!


ஆலய திருவிழா தருணத்தை சாதகமாக்கி , இரண்டு வீடுகளில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை மூன்றாம் வேரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது .

வீட்டார் ஆலயத்துக்குச் சென்றமையால், ஒரு வீட்டில் 6 ஒலி அமைப்பு சாதனங்களும் இன்னொரு வீட்டில் மோட்டார் சைக்கிள் பின்புற இருக்கைக்கு கீழிருந்த ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு தகவல் பரவியதை அடுத்து விசேட தேடுதலில் , சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவரிடமி ருந்து ஒரு தொகை பணத்தைக் கைப்பற்றினர். அவரிடமிருந்த ஒலிச்சாதனங்களையும் கைப்பற்றினர். மேலும் இருவரை மடக்கிப் பிடித்த மூளாய் வேரம் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் .
Previous Post Next Post


Put your ad code here