அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Tags:
sri lanka news