ரம்புக்கனையில் எரிபொருள் பவுஸருக்கு தீ வைக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான சந்தேகநபர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news