
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்பில் பௌத்த பிக்கு உட்பட 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மே மாதம் 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
sri lanka news