Friday 20 May 2022

இன்றைய ராசிபலன் - 20.05.2022 ..!!!

SHARE

மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல்நலம் பாதிக்கும். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவு எடுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் அளவாகப்பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்னைகளில்ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: பழைய கசப்பான சம்பங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தரு வார்கள். அசைவ உணவு விஷயங்களில் கவனம் தேவை. வீண்செலவுகள் அதிக மாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.




SHARE