யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பத்து வயது சிறுவனின் தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு கரை வந்தவேளை தனது தந்தையாரிடம் சென்ற சிறுவன் அயலூரான மாமுனை கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளான்
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ள நிலையில் குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டு நாளை மருதங்கேணி காவல்துறையினரால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன