கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை ; நிதியமைச்சர் அலி சப்ரி..!!!


பயன்படுத்தக்கூடிய வகையில் வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை. வரலாற்று காலம் தொடக்கம் தாக்கம் செலுத்திய காரணிகள், அரசாங்கத்தின் தவறான ஒரு சில பொருளாதார தீர்மானங்கள் வெளிநாட்டு கையிருப்பினை வரையறுத்துள்ளது.

பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை 6 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக சர்வதேச நிதி மற்றும் நீதி கட்டமைப்பு விசேட நிபுணர்கள் உள்ளடக்கிய குழு இரண்டுவார காலத்திற்குள் நியமிக்கப்படும் என நிதி மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (4) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை, நாட்டின் தற்பேதைய நிதிநிலைமை தொடர்பில் சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here