யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குப் பின்புறம் உள்ள விக்டோரியா வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. மாதாந்தச் சிகிச்சைக்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியே திருடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது முச்சக்கர வண்டியில் மாதாந்தச் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார். விக்டோரியா வீதியில் முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு , மருத்துவமனைக்குச் சென்ற அவர் திரும்பி வந்தபோது , முச்சக்கர வண்டி திருடப்பட்டிருந்தமையை அவதானித்தார்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மைய நாட்களாக வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
